`இப்படி ஒரு ரெக்கார்டிங், வேல்ர்டுலேயே நடந்ததில்லை!'- `பேட்ட'யைத் தெறிக்கவிடும் அனிருத்
`இப்படி ஒரு ரெக்கார்டிங், வேல்ர்டுலேயே நடந்ததில்லை!'- `பேட்ட'யைத் தெறிக்கவிடும் அனிருத்
Sindinga9 shop

`பேட்ட’ படத்தின் சிங்கிள் டிராக் இன்று மாலை வெளியாக உள்ளது.  அதை முன்னிட்டு, தற்போது அனிருத் பாடலுக்கு இசையமைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது, சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

 

‘எந்திரன்’ படத்துக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படம், `பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக், சிம்ரன், மேகா ஆகாஷ் எனப் பலர் நடிக்கின்றனர். சிம்லா, டார்ஜிலிங், உத்தரப்பிரதேசம் என வட மாநிலங்களில் ஷூட்டிங் நடத்தப்பட்டுவந்தது. கிட்டத்தட்ட படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில், படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.  அதை முன்னிட்டு, படத்தை புரொமோஷன் செய்யும் வேளைகளில் சன் பிக்சர்ஸ் தீவிரம்காட்டிவருகிறது.

அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு ‘பேட்ட’ படத்தின் ‘மரண மாஸ்’ பாடல் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன் `மரண மாஸ்’ பாடல் ரெக்கார்டிங் செய்யப்பட்டதை வலைதளங்களில் தற்போது பதிவிட்டு, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது சன் பிக்சர்ஸ்.

இந்த வீடியோ வெளியான சிறிது  நேரத்திலேயே ரசிகர்கள் வைரலாக்கிவருகின்றனர். `இப்படி ஒரு ரெக்கார்டிங், வேல்ர்டுலேயே நடந்தது கிடையாது’ எனக் கூறிக்கொண்டு அனிருத் வீடியோவில் டான்ஸ் ஆடுகிறார்.