கிரிக்கெட்டில் பலவிதமாக ஒரு வீரர் அவுட்டாகலாம். அதில் காட் அன்ட் போல்டும் ஒன்று. ஆனால் நியூசிலாந்து மகளிர் அணியின் காதி பெர்கின்ஸ் வித்தியாசமான முறையில் காட் அண்ட் போல்ட் ஆகியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலியா கவர்னர் ஜென்ரல் XI மகளிர் அணிகளுக்கான இடையே சிட்னியில் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆட்டத்தின் 45 ஆவது ஓவரில் ஆஸ்திரேலியாவின் ஹீதர் கிரகாம் வீசிய பந்தினை நியூசிலாந்து அணியின் காதி பெர்கின்ஸ் சந்தித்தார். அந்த ஓவரின் 5 ஆவது பந்தில் பெர்கின்ஸ் அடித்த பந்து எதிர்முனையில் நின்ற காதி மார்ட்டின் பேட்டில் நேரடியாக பட்டு உயரே எழும்பியது. அதனை பந்துவீச்சாளர் கிரகாம் பிடித்ததில் பெர்கின்ஸ் துரதிருஷ்டவசமாக அவுட்டானார்.