சசிகலா இன்னும் 2 மாதங்களில் வெளியே வருவார்: அமமுக கொ.ப.செ தங்கத் தமிழ்ச்செல்வன் பேச்சு

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா இன்னும் 2 மாதங்களில் வெளியே வருகிறார் என்று அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

இன்றைக்கு உள்ள சூழலில் சின்னம் பெரிதல்ல. தொகுதியில் நிற்கக் கூடியவர் யார் என்றுதான் மக்கள் பார்க்கிறார்கள். நல்லவரா கெட்டவரா, இவருக்கு ஓட்டு போட்டால் மக்களுக்கு சேவை செய்வாரா செய்யமாட்டாரா என்பதுதான் நடைமுறை, தாய்மார்களின் எண்ணம்

நிச்சயமாக அமமுக செயல்பாடு நன்றாக இருக்கிறது. ஒன்றரை வருஷமா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சசிகலா இன்னும் 2 மாதங்களில் சிறையிலிருந்து வெளியே வரப்போகிறார்.

என்றார் தங்கத் தமிழ்ச்செல்வன்.