தொகுப்பாளினிகளில் டிடியை தொடர்ந்து ரசிகர்களின் அதிக வரவேற்பை பெற்றவர் அஞ்சனா. இவர் ஒரு பாடல் நிகழ்ச்சியில் நீண்ட வருடங்கள் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார்.

பின் திருமணம், மகன் என பிஸியாக இருக்க சினிமா பக்கம் வராமல் இருந்தார். இதனால் ரசிகர்கள் அவரை மிகவும் மிஸ் செய்தனர். தற்போதும் கூட நீங்கள் எப்போது தொகுப்பாளினியாக வலம் வருவீர்கள் என்று ரசிகர்கள் டுவிட்டரில் கேட்டுக் கொண்டு தான் வருகிறார்கள்.

இந்த நேரத்தில் தான் அஞ்சனா தனது ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் மீண்டும் தொகுப்பாளினியாக வலம் வர இருப்பதாகவும், ஜீ தமிழில் ஜுனியர் சூப்பர் ஸ்டார் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக கூறியுள்ளார்.