குடும்ப பெண்ணாக அழகாக சேலை கட்டிக் கொண்டு தமிழ் சீரியல் ரசிகர்களை கவர்ந்தவர் பவானி ரெட்டி. தெலுங்கில் சீரியல்கள் நடித்து கொண்டிருந்த இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் சின்னதம்பி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் 2013ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகருடன் காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் மகிழ்ச்சியாகி செய்து வந்த இருவரது வாழ்க்கையிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. 2017ஆம் ஆண்டு இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் பிரதீப் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

இதுநாள் வரை இரண்டாவது திருமணம் வேண்டாம் என்று இருந்த அவர் அப்பா-அம்மா வற்புறுத்தலாம் மறுமணம் செய்ய இருக்கிறாராம். ஆனந்த் என்பவரை தான் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார், அவரும் சினிமா துறையை சேர்ந்தவராம்.