காதலர் தினம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளவர் நடிகை சோனாலி. இவர் கேன்சரால் பாதிக்கப்பட்டதாக சென்ற வருடம் அறிவித்து ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற அவர் தற்போது புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளார். தற்போது அவர் மீண்டும் சினிமா பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் ஆரம்பகாலத்தில் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களை சந்தித்த போது அவர்கள் கூறியது பற்றி நடிகை பேசியுள்ளார். “கேன்சர் ஸ்டேஜ் 4ல் இருக்கிறது, நீங்கள் உயிர்பிழைக்க 30% தான சான்ஸ்” என மருத்துவர்கள் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்களாம்.