Sindinga9 shop

சனி பகவான் ஸ்தான பலன்கள்

சனிபகவான் உச்ச, ஆட்சி, நீச வீடுகளில் அளிக்கும் பலன்களைக் காண்போம். சனி பகவான் துலாத்தில் உச்சம் அடைகிறார். மேஷத்தில் நீசம் அடைகிறார். மகரம், கும்பம் ஆகிய வீடுகளில் ஆட்சி பெறுகிறார். சனி பகவான் உச்சம் பெற்றிருப்பாரானால் அந்த ஜாதகர் எதையும் நல்ல முறையில் செய்து பலரது பாராட்டைப் பெறுவார்.

மனோதிடம், தீர்க்காயுள் பெற்று தொழில் துறையில் சிறந்து விளங்குவார். சனி பகவான் ஆட்சி பெற்றிருப்பாரானால் சுகபோக வாழ்க்கையுண்டாகும். தொழில் வளம் சிறக்கும். விவசாய நன்மை விருத்தியாகும். வாகன யோகமுண்டு. பிரயாண லாபம் உண்டாகும். சனி பகவான் நீசம் பெற்றிருப்பாரானால் நாத்திக வாதம் புரிவார்.

சாஸ்திர சம்பிரதாயங்களை நம்ப மாட்டார். எதற்கும் மனோ தைரியம் இருக்காது. கீழ்த்தரமானவர்களுடன் நட்பு கொள்வார். கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய வீடுகளில் சனி பகவான் பகை பெறுகிறார். சனி பகவான் பகை வீட்டிலிருப்பாரானால் உடல்நலம் அடிக்கடி பாதிக்கும். எதிலும் எப்போதும் ஒருவித சலிப்பான உணர்வு மிகுந்து காணப்படும். உற்றார், நண்பர் ஆதரவு இருக்காது.

ஜாதகத்தில் கிரகங்களின் பலத்தை பொறுத்துதான் சனியோ, குருவோ பலனை தர முடியும். சனி பகவான் தொழில் காரகர், ஆயுள்காரகரும் அவரே. சனிபகவான் இருக்கும் இடத்தைப் பொருத்தும், கிரகங்களின் சேர்க்கையைப் பொருத்தும் ஒருவருக்கு தொழில் அமையும்.

எங்கப்பா டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டார்… ஆயிட்டாரா? இல்லை… ஆசைப்பட்டார். நான் கலெக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டேன்… ஆனால் முடியலை… என்று ஆதங்கப்படுவார்கள். ஆசை இருக்கு தாசில் பண்ண… ஆனா அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க என்று ஊர் பக்கம் ஒரு பழமொழி இருக்கிறது.

அரசு வேலையோ? அடிமைத் தொழிலோ சனிபகவான் தயவு நிச்சயம் தேவைங்க. சனிபகவானைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. அவர் சோதனைகளை கொடுப்பார். அது வேதனைகளைத் தாங்குவதற்கான சோதனை.

கண்டக சனி

குரு மங்கள காரியம் கொடுக்கும். சனி அசுப காரியம் செய்யும். அதனால்தான் சனிப்பெயர்ச்சியை கண்டு நம்மில் பலர் மிரட்சியடைகிறோம். சனி பகவான் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சரித்தால் அது கண்டகசனி. கண்டக சனி நடக்கும்போது ஆறுக்குடையவர் திசை நடந்தால் ஆபரேசன் நடக்கும். அஷ்டம சனிஇஏழரை சனி நடக்கும்போது ஜாதகத்தில் எட்டுக்குடையவர் திசை நடந்தால் நஷ்டத்தை சந்தித்தாக வேண்டும்.ஏழரை சனி

அட்டம சனி,ஏழரை சனி,கண்டக சனி, விரய சனி,பாத சனி அதிக பாதிப்பை தரும். வம்பு வழக்கு பிரச்சினை, நோய்கள், டாக்டரை பார்த்தல்,சிகிச்சை பெறுதல், கோர்ட் வாசலை மிதித்தல்,போலீஸ் ஸ்டேசன் வாசலை மிதித்தல், சிறைவாசம், கொள்ளி வைத்தல், அறுத்தல், கிழித்தல், பிரிவினை, தையல் போடுதல் போன்ற பலன்கள் எல்லாம் சனியால்தான் நடக்கிறது.

சுபவிரயங்கள்

அஷ்டம சனி,ஏழரை சனி நடக்கும்போது யோகமான திசாபுத்தி நடந்தால் கல்யாணம், காதுகுத்து, வீடுகட்டுதல் என சுப காரியங்களாக மாற்றி சுப விரயமாக ஏழரை சனி மாற்றி விடும். இந்த சனிப்பெயர்ச்சியில் தனுசு, கன்னி, விருச்சிகம், ரிஷபம், மகரம் ராசி அன்பர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பாதிப்பு

கைக்குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு சளிஇகாய்ச்சல்,வயிற்றுப்போக்கும் குழந்தையின் தாய்க்கு உடல் பாதிப்பும்,தந்தைக்கு பண விரயமும் அதிகமாக இருக்கும். பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றால் படிப்பில் கவனம் குறையும். குறும்புத்தனம் அதிகமாக இருக்கும் எதையாவது உடைப்பது, நெருப்பில் சுட்டுக்கொள்வது, கீழே விழுந்து அடிபடுதல், காய்ச்சல் மற்றும் சீசன் நோய்கள் உடனே பாதிக்கும்.

நண்பர்களினால் பாதிப்பு

இருபத்தியோரு வயதுக்குட்பட்ட வாலிபர்கள் எனில் புதிய நண்பர்கள் சேர்க்கை, கெட்ட சகவாசத்தால் கெட்ட பழக்கங்களை கற்றுக்கொள்வர். வீண் வம்பை விலை கொடுத்து வாங்குவர்.அடுத்தவர் செய்த தப்பு இவர்கள் மேல் விழும்.பக்கத்து வீட்டாரோடு சண்டையிடும் நிலை வரும்.

உணவு விசயத்தில் கவனம்

நாற்பது வயது மேற்பட்ட அன்பர்களுக்கு உடல்நலனில் அதிக கவனம் வைக்கவும். முழு உடல் மெடிக்கல் செக்கப் செய்து கொள்ளுங்கள்.உணவு விசயத்தில் கவனம் தேவை.சுகர்,பிரசர் போன்ற மருத்துவத்துக்கு கட்டுபடாத நோய்கள் உண்டாகும் காலம். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருக்கவும்.

அரசு வேலை கிடைக்கும்

அரசு வேலையில் அமர சூரியனும், சனியும் சரியான இடத்தில் அமரவேண்டும். பார்க்க வேண்டும். சனி பகவான் சூரியனுடன் சேர்ந்தால் ராஜாங்க சம்மந்தமான வேலைகள், அரசு, அரசு சார்ந்த தொழில், அரசியல், தலைமை பதவி, கெளரவ பதவிகள் ஆகியவை அமைகின்றது. சனி சந்திரனுடன் சேர்ந்தால் மனம் சார்ந்த தொழில்கள், நீர் சார்ந்த தொழில்கள், பயணம் சார்ந்த தொழில்கள், கனிணி சார்ந்த தொழில்கள் அமையும்.

டாக்டர், பொறியாளர்

சனி செவ்வாயுடன் சேர்ந்தால் கடின உழைப்பு சார்ந்த தொழில்கள், இயந்திரங்களின் உபயோகம் சார்ந்த தொழில்கள், நெருப்பு சார்ந்த தொழில்கள், சக்தி சார்ந்த தொழில்கள், மருத்துவம் சார்ந்த தொழில்கள்

துறவியாகும் யோகம்

சனி ராகு சேர்ந்தால் பரிகார கர்மங்கள், மருத்துவம், வெளிநாட்டு வேலை, மந்திர மாந்திரீக வேலைகள், விஷம் மற்றும் மருந்து சார்ந்த தொழில்கள். சனி கேது சேர்ந்தால் மோக்‌ஷ கர்மங்கள், இறுதி காரியங்கள், ஜோதிடம், ஞானம், ஆன்மீகம், பரிகாரம், சித்து, மந்திர கட்டு, ரசாயனம் சார்ந்த தொழில்கள், எளிமை, இழப்பு, துறவியாவார்.

சனிபகவானை சரணடையுங்க

சனியால் உண்டான பாதிப்புகள் குறைய,சனிக்கிழமை காகத்துக்கு சாதம் வைத்து விரதம் இருங்க. மாற்றுத்திறானாளிகளுக்கு உதவுதல்,முதியோர்க்கு அன்னதானம்,வஸ்திர தானம்,சொர்னதானம் செய்தல், திருநள்ளாற, குச்சனூர் ஆகிய சனி பகவான் ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வரலாம்