கோடை என வந்து விட்டாலே குழந்தைகள்முதல் பெரியவர் வரை வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் அலற தொடங்கி விடுவார்கள். வெளியில் செல்லவே பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடப்பார்கள்.மேலும் வெயிலின் தாக்கத்தை தாங்கமுடியாமல்சிரமபப்படுவார்கள்.

இந்த கோடை வெயிலை சமாளிக்க நமக்கு பெரிதும் உதவுவது பழங்கள் தான். வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மாம்பழம், உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி,
தண்ணீர் சத்து நிறைந்த கிர்ணிப்பழம்,நாவல் பழம் இவற்றை சாப்பிடலாம். இவற்றில் இருக்கும் வைட்டமின் சத்துகள் நமது சருமத்தை பொலிவடைய செய்யும். இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவைக்கொண்ட இந்த பழங்களில் அதிக பாரம்ரிய மருந்துவ குணங்களும் உண்டு.