மியான்மரை சேர்ந்த பெண் சிங்கப்பூரில் தம்பதியால் கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில் அந்த தம்பதிக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின பெயர்மோ மோ (32). மியான்மரைச் சேர்ந்த இவர் சிங்கப்பூரில் உள்ள தம்பதியின் வீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேலை செய்தார்.

அப்போது அந்த தம்பதிகள் மோ-வை மிக மோசமாக கொடுமைப்படுத்தி உள்ளனர்.
அதாவது சிறிதளவு மட்டுமே உணவு கொடுத்து பட்டினி போட்டனர்.அவர் அதை வாந்தி எடுத்த போது அதையே எடுத்து சாப்பிடும்படிஅடித்து உதைத்துள்ளனர்.பொலிசாருக்கு இது குறித்து தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுஅவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது-. வழக்கை விசாரித்த நீதிமன்றம்அந்த ஆணுக்கு
24 மாதங்கள் சிறை தண்டனையும், அவரது மனைவிக்கு 47 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதித்தது- இந்த தம்பதிஏற்கனவே இந்தோனேசியாவை சேர்ந்த பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.