நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் கலக்கிய பாஜக தமிழகத்தில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை நடிகர் ரஜினிகாந்த கூறியுள்ளார்.

போயஸ்கார்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், நாடாளுமன்ற தேர்தலில் மோடி என்னும் தனி மனிதருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய் பிறகு மக்களை ஈர்க்கும் தலைவராக மோடி உள்ளார். மோடி பதவியேற்கும் விழாவில் நான் கலந்துக்கொள்கிறேன்.

காவிரி-கோதாவரி நதிகள் இணைப்பு பற்றிய பாஜகாவின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலையால் எதிர்க்கட்சிகளுக்கு வெற்றிக்கிடைத்துள்ளது. நீட், மீத்தேன், ஸ்டெர்லைட் உட்பட எதிர்க்கட்சியினரின் சூறாவாளி பிரச்சாரத்தால் தமிழகத்தில் பாஜக தோல்வியடைந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் ராகுல்காந்தி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. கட்சி தொடங்கிய 14 மாதங்களிலே 3 சதவீத வாக்கு பெற்ற மக்கள் நீதி மய்யத்திற்கு வாழ்த்துக்கள். மேலும், நான் கட்சி தொடங்க இன்னும் நேரம் இருக்கிறது என ரஜினிகாந்த தெரிவித்துள்ளார்.