உலகக்கோப்பை தொடரின் வங்கதேச அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தின் போது அந்தணியின் பீல்டிங்கை டோனி சரி செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி என்ன செய்தாலும் அது டிரண்டாகிவிடுகிறது. அந்த வகையில் நேற்றைய பயிற்சி ஆட்டத்தின் போது டோனியின் செயல் ஒன்று சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.

அதாவது, ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸின் 40-வது ஓவரை வங்கதேச அணியின் பந்து வீச்சாளரான ஷபிர் ரஹ்மான் வீச வந்தார்.

இதை டோனி எதிர்கொள்ள தயாராக இருந்தார். அப்போது பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு ஓடி வந்த போது, பந்து வீச்சாளர் கூறிய லெக் சைடில் நிற்கவைக்கப்பட்ட வீரர், பீல்டிங் செட் செய்யப்பட்ட இடத்தில் நிற்கவில்லை.

இதனால் இதை கவனித்த டோனி, பந்துவீச்சாளரை உடனடியாக நிறுத்தி, அதை சுட்டிக்காட்டினார்.

இதை அப்போது தான் பந்துவீச்சாளரும் உணர்ந்தார். உடனடியாக முதலில் சொன்ன இடத்தில் நிற்குமாறு பந்துவீச்சாளர் அறிவுறுத்தினார்.