திரைத்துறையில் நல்ல நண்பர்களாக இருந்து வந்த ரஜினியும் கமலும் அரசியலில் நேர் எதிரிகளாக செயல்பட்டு வருகின்றனர். இருவரது கொள்கைகளும் மாறுபட்டு இருக்கின்றன.

மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் போட்டியிட்டு சுமார் 4 சதவீத வாக்குகள் பெற்றுயிருக்கிறது. நான்கு மக்களவை தொகுதிகளில் ஒரு லட்சதிற்கும் மேற்பட்ட வாக்குகளை கமல் கட்சி பெற்றுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மையம் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.

நடிகர் ரஜினியும் 2021சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து புதிய கட்சியை துவக்கும் பணிகளில் மும்பரமாக இறங்கியுள்ளார்.

ரஜினியும், கமலும் அரசியல் களத்தில் இணைந்து செயல்பட்டால் பெரிய வெற்றி பெறலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். ரஜினியும் கமலும் இணைவார்களா என்ற கேள்விக்கு வார நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மகேந்திரன்

எங்கள் தலைவர் கமலுக்கும் ரஜினிக்கும் சினிமாவில் நல்ல நட்பும் தோழமையும் உண்டு. ஆனால் அரசியலை பொறுத்தவரை ரஜினியுடன் கூட்டணி வைக்கப்படுமா என்பதை காலமும் எங்கள் கட்சி தலைவர் கமல் தான் முடிவு செய்யவேண்டும். தவிர, கூட்டணி வி‌ஷயத்தால் எங்களுடைய தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே, கூட்டணி பற்றி நாங்கள் அவசரப்பட மாட்டோம். தேசியக்கட்சிகள் வி‌ஷயத்திலும் எங்கள் நிலைப்பாடு இதுதான்.

இவ்வாறு மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மகேந்திரன் கூறினார்.