உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
வீட்டில் உள்ளவர்கள் மற்றும் பெரியோர்களின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்க ஆரம்பிக்கும். உங்களுடைய தொழிலில் பிரபலமாக இருக்க்க கூடியவர்களுடைய நட்புறவு உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய வேலையில் புதிய இலக்கினை நிர்ணயம் செய்யத் தொடங்குவீர்கள். உங்களுடைய செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதை நீங்களே உணரத் தொடங்குவீர்கள். அதனால் தொழிலில் உங்களுக்கு லாபமும் அதிகரிக்கும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமாகவே நல்ல பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

ரிஷபம் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உடன் பணிபுரிகின்ற சிலரால் மற்றவர்களுடைய வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். நீங்கள் செய்கின்ற வேலையில் அடுத்தவர்களுடைய தொந்தரவுகளின் மூலம் எல்லாமே கொஞ்சம் தாமதமாகவே நடக்கும். முக்கிய உத்தியோகத்தில் இருக்கிறவர்கள் தங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீலம் நிறமும் இருக்கும்.

மிதுனம் தொழிலில் பங்குதாரர்களுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் ஒரு முடிவுக்கு வரும். மனைவி வழி உறவுகளின் உதவியினால் உங்களுடைய தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான முயுற்சியில் ஈடுபடுவீர்கள். இதுவரையிலும் இழந்த பொருட்களை மீட்பதற்கு பெற்றோர்களின் வழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம் நீங்கள் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். உங்களுடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களைக் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். வெளியாட்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த தன வரவு கைக்கு வந்து சேரும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனதுக்குள் புதுவித எண்ணங்களும் உணர்வுகளும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம் பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்குளுக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். தூர தேசங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது மனம் மகிழ்ச்சி அடையும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் உங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். பயணங்களின் மூலமாக லாபங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கன்னி வியாபாரங்கள் தொடர்புடைய சின்ன சின்ன நுணுக்கங்களையும் கற்றுக் காள்ள ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சிக்கும் குதூகலத்துக்கும் பஞ்சம் இருக்காது. வீட்டில் நிலத்தடி நீர், தண்ணீர் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். வீடு, மனைகள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலம் நிறமும் இருக்கும்.

துலாம் வீட்டில் பிள்ளைகளின் மூலம் சின்ன சின்ன சுப விரயச் செலவுகள் உண்டாகும். வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆலோசனைகளைப் பெறுவீர்கள். உங்களுடைய வியாபாரத்தில் கொஞ்சம் உங்களுக்கு சாதகமான விஷயங்கள் உண்டாகும். மனதுக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி நட்பு வட்டாரம் விரிவடையத் தொடங்கும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலமாக உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். பொருளாதார முன்னேற்றமும் அதனால் சேமிப்பும் உயரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம் எந்த காரியமாக இருந்தாலும் அதை துணிச்சலுடன் கையாள்வீர்கள். அதேபோல் இன்றும் உங்களுடைய துணிச்சலுக்கு சவாலாக ஒரு விஷயம் காத்திருக்கும். வீட்டில் உள்ளவர்களுடைய ஆதரவினால் உங்களுடைய புதிய முயற்சிகளில் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றமும் புதிய வாய்ப்புகளும் உருவாகும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் பொருளாதாரம் நல்ல நிலைமைக்கு வரும். ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு நீங்கள் எந்த காரியத்தைச் செய்தாலும் அதில் இரண்டு மடங்கு கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்குக் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். நீங்கள் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனங்களின் மூலமாக சில விரயச் செலவுகள் வந்து போகும். அடுத்தவருக்கு உதவி செய்கின்ற பொழுது கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

மகரம் வீட்டில் கால்நடைகள் ஏதேனும் இருந்தால் அதன்மூலம் பெரும் ஆதாயம் உண்டாகும். உங்களுடைய வாதத் திறமையினால் வெற்றி பெறுவீர்கள். செய்யும் சுய தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு மற்றும் மனைகளால் நல்ல லாபம் உண்டாகும். இதுவரை தள்ளித் தள்ளி போன வேலைகளை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த சுப செய்தி உங்கள் காதுகளுக்கு வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

கும்பம் பெற்றோர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். உடன் பிறந்தவர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். புதிதாக வேலை தேடுகின்ற ஆட்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். எந்தவொரு காரியமாக இருந்தாலும் அதை கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்கப் பாருங்கள். வீண் அலைச்சல்கள் வந்து போகும். உங்களுடைய மேலதிகாரிகளால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம் புதிய நபர்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். அதன்மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உங்களுடைய எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் கூடுதல் பொறுமையுடன் இருப்பது நல்லது. நிர்வாகத் துறையில் இருப்பவர்கள் இதுவரையிலும் இருந்து வந்த சின்ன சின்ன குறைகளைக் களைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்