மனிதன் தோன்றிய நாள் முதல் நோய்களும் பின் தொடர்ந்தே வருகின்றன. அதிலும் இன்றைய வாழ்வில் நோய்கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. அவ்வப்போது சிலவகை நோய்களை நாமே வரிந்து கட்டிக் கொண்டு தத்து எடுத்து கொள்கின்றோம்.
அப்படிப்பட்ட நோய்களில் நம்மிடம் அதிகம் சொந்தம் கொண்டாடுவது வாயுப் பிரச்சனைகளும் அது சம்பந்தப்பட்ட நோய்களும்தான்.

வயிற்றில் கேஸ் இருந்தால் அடிக்கடி ஏப்பம் வருவது..டர் டர்..மற்றும் மலச்சிக்கல்… போன்ற விடயங்கள் அதிகமாக காணப்படும். மூச்சு எடுக்கவே சிரமப் படுவீர்கள். இதற்கு இலகுவான தீர்வு இயற்கை மருத்துவத்தில் உள்ளது

சீரகம். இது செரிமான பிரச்சனைகளுக்கும் கேஸ் பிரச்சனைக்கும் தீர்வாகும் ஒன்று.

ஒரு கப் தண்ணீரை பாத்திரம் ஒன்றில் ஊற்றி ஒரு கரண்டி சீரகம் போட்டு அதனுடன் இரண்டு புதினா இலை சேர்த்து கொதிக்க வைய்யுங்கள்..! நன்றாக கொத்தித்ததும் ஆறவைத்து குடியுங்கள். ஒரு நாளைக்கு மூன்று வேலை வீதம் மூன்று நாட்கள் குடித்தாலே ஜென்மத்திலும் கேஸ் பிரச்சனை வரவே வராது.

அடுத்து பூண்டை தோல் உரித்து சிறிதளவு நெய் சேர்த்து வறுத்து சாப்பிடுங்கள் கேஸ் தொல்லை ஓடியே போய்விடும். மற்றும் பூண்டு சேர்த்து ஒரு கப் நீரில் கொதிக்க வைய்யுங்கள் நன்றாக கொதித்ததும் வடித்து..

ஒரு நாளைக்கு இரண்டு முறை வீதம் மூன்று நாட்கள் குடித்தாலே போதும். கேஸ் தொல்லைக்கு குட் பாய் சொல்லிவிடலாம்