இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் தமது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய கிறிஸ் கெயில், அதே இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்துடன் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

அந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21 ஆம் திகதி மும்பையில் அறிவிக்கப்பட்டது.

தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

3 வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் மீண்டும் கோஹ்லியே அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் இந்த தொடருக்கான ஒருநாள் மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கிண்ணம் தொடரில் ஏமாற்றமளித்த மற்றும் உடற் தகுதியிலும் சரிவர இல்லாத கெயில் அணிக்கு தெரிவாகி இருக்கிறார்.

உலக கிண்ணம் தொடருடன் ஓய்வு பெறுவேன் என்று அறிவித்த கெயில் மீண்டும் விளையாடுவேன் என்று கூறியதால் இந்த தொடரோடு ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிராக 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அறிமுகமானார் கெயில்.

அதேபோன்று இந்திய அணிக்கு எதிராக தமது கடைசி தொடரை விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரோடு தமது ஓய்வினை அவர் அறிவிப்பார் என்று தெரிகிறது.

சிக்சர் மன்னன், யுனிவர்சல் பாஸ் என அழைக்கப்படும் கெயில், 298 ஆட்டங்களில் இதுவரை 10,393 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான தொடரில், ஆகஸ்ட் 8 ஆம் திகதி கயனாவில் முதல் ஒருநாள் ஆட்டமும், டிரினாடாடில் 11 மற்றும் 14 ஆம் திகதிகளில் 2வது 3வது போட்டிகளும் நடைபெற உள்ளது.

 

Sindinga9 shop