குழந்தை பிறந்தவுடனே சேனைத் தண்ணீர் கொடுக்கும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

அதாவது கருப்பட்டியை சுத்தமான தண்ணீரில் கரைத்து வடிகட்டிய திரவத்தை குழந்தையின் வாயில் சில துளிகள் இடுவார்கள்.

இது எதற்காக என்று யோசித்தது உண்டா? இதன் அறிவியல் பின்னணி பற்றி தெரியாமல் இருப்பவர்கள் ஏராளம்.

குழந்தை பிரசவித்த பின் ஏற்படும் உடல்வலியையும் அடிக்கடி வரும் அழுகையையும் நிறுத்த இந்த தண்ணீர் பயன்படும்.

இதை எளிதில் தயார் செய்யலாம், 100 மி.லி. காய்ச்சி ஆறிய தண்ணில் 24 கிராம் கருப்பட்டி அல்லது சர்க்கரையைக் கலந்து பின்னர் கரைத்து வடிக்கட்டி, குழந்தையின் வயது, எடைக்கு ஏற்ப வழங்கினால் வலியால் ஏற்படும் அழுகை உடனே குறையுமென்று ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.

  • பிறந்தது முதல் ஒரு மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு 0.2 முதல் ஒரு மி.லி. சொட்டுவரை ஒரு வேளைக்கு வழங்கலாம். ஒரு நாளைக்கு 5 மி.லிக்கு (5 சொட்டுகள்) மேல் வழங்கக் கூடாது.
  • 18 மாதம்வரையுள்ள குழந்தைகளுக்கு ஒரு மி.லி. முதல் 2 மி.லி.வரை ஒருவேளைக்கு வழங்கலாம்.

பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த மாதிரி எடுக்க அதன் குதிகாலில் ஊசியால் குத்தும்போதும், Circumcision எனப்படும் ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பின் முன்தோலை நீக்கும் அறுவைசிகிச்சையின் போதும், நோய்த் தடுப்பு ஊசிகள் இடும் தருணத்தில் சில விநாடிகளுக்கு முன் சேனைத் தண்ணீர் வழங்கப்படுகிறது.

காது குத்தும் நிகழ்வுகளில் வாயில் இனிப்பாகக் கருப்பட்டி, வெல்லம் அல்லது சீனியை தருவதன் மூலம் வலியை மறக்கடிக்கும்.

இப்படிப்பட்ட தண்ணீரின் மகிமையை அறிந்து அமெரிக்க குழந்தைகள் நலச் சங்கம் அங்கீகரித்து நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Sindinga9 shop