Sindinga9 shop

நன்றி மறந்தவன் தமிழன் என பொன் ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு தான் உடன்படுவதாக சீமான் கூறியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சில தினங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில், பிரதமர் மோடி தமிழ் தான் பழமையான மொழி எனவும் சமர்ஸ்கிருதத்தை விடவும் தமிழ் தொன்மையானது எனவும் கூறினார்.

ஆனால் இதை கொண்டாடாத தமிழன் ஒரே நாடு ஒரே மொழி என கூறப்பட்டதை மட்டும் விமர்சிக்கிறான். நன்றி மறந்தவன் தமிழன் என கூறினார். இது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அப்போது அவர் கூறுகையில், நன்றி மறந்தவன் தமிழன் என அவர் சொன்னதில் நானும் உடன்படுகிறேன்.

ஏனென்றால், தற்போது யாரும் நன்றி என சொல்வதில்லை, அதற்கு பதிலாக THANKS என்று தான் சொல்கிறார்கள், அதனால் தான் பொன் ராதாகிருஷ்ணன் அப்படி சொல்லியிருப்பார் என நினைக்கிறேன்.

மோடி தமிழ் மொழியின் பெருமை குறித்து பேசியதை நானும் பல இடங்களில் கோடிட்டு காட்டியிருக்கிறேன். ஆனால் அந்த பெருமைமிக்க மொழிக்கு நீங்கள் செய்தது என்ன என்பது தான் எங்கள் கேள்வி.

இந்தியாவின் ஆட்சி மொழியாக ஏன் தமிழை ஆக்கவில்லை, சிறிய நாடான சிங்கப்பூரில் கூட தமிழ் ஆட்சி மொழியாக ஆக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் மொழியான தமிழுக்கு எந்த உயர்வையும் கொடுக்கவில்லை என கூறியுள்ளார்.