இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அசாரூதினின் மகனை தான் என் தங்கை திருமணம் செய்யவுள்ளார் என்று டென்னிஸ் வீராங்கனை சானியாமிர்சா கூறியுள்ளார்.

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனையான சானியாமிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

இந்தியாவில் பிறந்து, ஒரு பாகிஸ்தானியாரை எப்படி திருமணம் செய்யலாம் என்று சானியாமிர்சாவை பலரும் திட்டினர். ஆனால் சானியா மிர்சா இதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன்னுடைய வாழ்க்கையை, அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அசாருதீன் மகன் ஆசாத்தை சானியா மிர்சாவின் தங்கை ஆனம் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியானதால், இது குறித்து சானியா மிர்ஷாவிடம் கேட்ட போது, அவர், ஆம் எனது தங்கை டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். அவர் ஒரு அழகான பையனை திருமணம் செய்யவுள்ளார். அவர் பெயர் ஆசாத். அவர் முகமது அசாருதீன் மகன் என்று தெரிவித்துள்ளார்.

Sindinga9 shop