பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே, தமிழ் படங்களின் மூலம் பிரபலமான நடிகை அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

துளு படத்தின் மூலம் அறிமுகமானாலும், உதயம் NH4, ஒரு கன்னியும் மூனு களவாணிகளும், இந்திரஜித் உள்ளிட்ட தமிழ் படங்களின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் அஷ்ரிதா ஷெட்டி(26). இவர் தற்போது ‘நான் தான் சிவா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அஷ்ரிதாவும் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க போராடி வரும் பிரபல வீரரான மனிஷ் பாண்டேவும் காதலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

மனிஷ் பாண்டே, தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் கர்நாடக அணியை வழிநடத்தி வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் எதிர்வரும் டிசம்பர் 2ம் திகதியன்று மும்பையில் திருமணம் நடைபெற உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதில் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் டி20 போட்டி டிசம்பர் 6ம் திகதியன்று துவங்க உள்ளது. இதனால் போட்டியில் விளையாட உள்ள சில வீரர்கள் திருமணத்தில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sindinga9 shop