Sindinga9 shop

முகெனின் காதலி நதியா வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்நபர் நதியாவின் காதலர் என தகவல் வெளியாகியுள்ளதால் முகென் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகி படு பிஸியாக சுற்றிக்கொண்டிருப்பவர் மலேசியாவைச் சேர்ந்த பாடகர் முகேன் ராவ். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது தான் வெளியில் ஒரு பெண்ணை காதலிப்பதாக தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார்.

இதைத்தொடர்ந்து, முகேன் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, முகேன் காதலிப்பதாக சொன்ன நதியா முதன்முறையாக முகெனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனால் நதியாவும் முகெனைக் காதலிக்கிறார் என்பதை ரசிகர்கள் உறுதி செய்தனர்.

இந்நிலையில்,ல் முகேன் பேட்டி ஒன்றில் பேசியபோது, நதியா தன் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார், இதை ரசிகர்களிடம் இன்னும் சிறிது நாட்களில் நாங்களே கூறலாம் என்று இருந்தோம் என தெரிவித்தார்.

ஆனால், தற்போது முகேன் காதலி வேறொரு நபருடன் இருக்கும் புகைப்படம் படு வைரலாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் முகென் காதலிப்பதாகக் கூறப்படும் நதியா வேறு ஒருவரை கடந்த 6 வருடங்களுக்கு மேலாகக் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதோடு, முகெனின் காதலுக்கு நதியா இதுவரை சம்மதம் கூறவில்லை என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், முகெனுக்கு நதியா மீது வெறும் க்ரஷ் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ள முகென், திரை துறையில் சாதிப்பது குறித்து தனது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளதாகவும், காதல் பற்றி அவர் யோசிக்கப் போவதில்லை எனவும் சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ முகெனோ அல்லது நதியாவோ இது குறித்து உரிய விளக்கம் அளித்தால் தான் உண்மை வெளியில் வரும்.