Sindinga9 shop

பிரபலமான விஜய் டிவியின் நீயா? நானா? நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கோபிநாத் ஒட்டுமொத்த அரங்கத்தையும் தன் பக்கம் இழுக்கும் சாதுர்யம் கொண்டவர்.

இவரின் அசாதரண பேச்சும், திறமையும், ஒரு கருத்தை எடுத்துரைக்கும் விதமும் மக்களை தன் பக்கம் இழுக்கும் திறன் உடையவர்.

நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் இன்று உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்கள், பெண்கள், முதியவர் என பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக திகழ்ந்து வருகிறார். இவர் எடுத்துரைக்கும் கருத்தும், ஆழமாகவும், ஆர்வம் குறையாமலும் பேசுவதில் வல்லமை கொண்டவர் என்பதலே இவரை அனைவருக்கும் பிடித்து போக காரணமாக இருக்கிறது.

இன்றளவிலும் வெற்றிகரமாக நீயா நானா நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு முழுகாரணமும் கோபிநாத்தின் பேச்சு என்றே கூறலாம். இவர் பேசும் ஒவ்வொரு பேச்சுக்கும் ரசிகர்கள் மத்தியில் கைதட்டல்கள் பறக்கும்.

இவர் தொகுத்து வழங்கும் சில முக்கியமான நிகழ்ச்சிகள்:

  • நீயா நானா
  • விஜய் விருதுகள்
  • குற்றமும் பின்னணியும், நடந்தது என்ன?
  • உன்னால் முடியும்
இவர் எழுதியுள்ள புத்தகங்கள்

“தெருவெல்லாம் தேவதைகள்”,

“ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!”,

“நேர் நேர் தேமா”,

“நீயும் நானும்”

விருதுகள்
  • இந்தியா டுடே வழங்கிய இந்தியாவின் இளம் சாதனையாளர்கள் விருது- – 2006
  • ஜூனியர் சேம்பர் இன்டர்நேசனல் அமைப்பு வழங்கிய சிறந்த இளம் இந்தியர் விருது – 2008 ஆம் ஆண்டு
கோபிநாத்தின் வெற்றியின் ரகசியம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சொந்த ஊர். இவரின் பூர்வீகம் தஞ்சாவூர் ஜில்லா சித்துக்காடு.

படித்தது எல்லாமே அறந்தாங்கி மற்றும் திருச்சியில் தான். ரேடியா ஜாக்கியாவும் வேலை பார்த்துள்ளார். இவர் பல மீடியாவில் வேலைக்காக தேடி அலைந்துள்ளார்.

அதன் பின்பு ராஜ் தொலைக்காட்சியில் சில காலம் செய்தியாளராகவும் இருந்தார். இதைத்தொடர்ந்து தான் முதல் வாய்ப்பாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குற்றமும் அதன் பின்னணியும் நிகழ்ச்சி மூலம் பங்கேற்றார்.

இவரின் திறமைக்கு அடுத்ததாக தேடி வந்த வாய்ப்பு தான் நீயா நானா.அதில் கோபிக்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு தான் இன்று அவரை உலகம் அறிய செய்துள்ளது. பல இளைஞர்களின் உத்வேகமாக திகழ்ந்து வருகிறார். நீயா? நானா? கோபிநாத் என்றால் தெரியாதவர்களே இல்லை.

குடும்பத்தை அதிகம் நேசிக்க கூடிய கோபிநாத் முதன்முறையாக விருது நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி மற்றும் செல்ல மகளை அறிமுகப்படுத்தினார்.