Sindinga9 shop

நமது அழகில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது என்றால் அது கூந்தல் அழகு தான். அதிலும் கருகருவென அலைபாயும் கூந்தல் என்றால் போதும் உங்கள் அழகை பலமடங்கு மெருகூட்டி காட்டும்.

பொதுவாக தலைக்கு குளிக்கும் போது, தலைமுடியை சீவும் போதும் தலைமுடி உதிர்வது என்பது சாதாரணம்.

அதுவும் ஒரு நாளைக்கு ஒருவருக்கு 50 முதல் 100 முடிகள் உதிர்வது என்பது சகஜம்.

ஆனால் எப்போது ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக தலைமுடி கொட்டினால், அப்போது தான் மிகுதியான கவலைக்குள்ளாகக் கூடும்.

பொதுவாக பெண்களுக்கு 30 களில் கூந்தல் வளர்ச்சி தடுமாற்றமாக இருக்கும், 40 களில் சிலருக்கு முற்றிலும் நின்று போயிருக்கும்.

நீண்ட ஆரோக்கியமான கூந்தல் 40 களிலும் பெறலாம். இங்கே சொல்லப்பட்டிருக்கும் சில குறிப்புகளை தவறாமல் பின்பற்றுங்கள். நிச்சயம் ஒரு சில மாதங்களில் முன்னேற்றம் காண்பீர்கள்.

உருளைக்கிழங்கு மசாஜ்

முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன்உருளைக்கிழங்கில் உள்ளது.

உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

எண்ணெய் மசாஜ்

வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

வெங்காயச் சாறு

வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.