கேரள மாநிலத்தில் கல்லூரி மாணவியின் புத்தகப்பையில் பச்சிளம் குழந்தை கொலைசெய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவத்தில் தாயின் வாக்குமூலம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கேரள மாநில, இடுக்கி அடுத்துள்ள வாத்திக்குடி என்ற பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் கட்டப்பனை அரசு கல்லூரியில் படித்து வருகிறார்.

இவரும், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.

இதனால், குறித்த மாணவி கர்ப்பம் தரித்துள்ளார்.

இதனை, தன் காதலனிடம் தெரிவித்து வெளியில் தெரிந்தால் அவமானமாகிவிடும், உடனே தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனால், பயந்துபோன இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.

இதனால், அதிர்ந்துபோன மாணவி பிரச்சனையை வெளியில் சொல்லாமலும், கர்ப்பத்தை கலைக்க வழி தெரியாமலும் கல்லூரி விடுதியிலேயே தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென்று குறைபிரசவத்தில் 6 மாதத்தில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

இதனால், செய்வதறியாது முழித்த மாணவி குழந்தையை கொலை செய்து தன்னுடைய புத்தகப் பையில் ஒரு பிளாஸ்டிக் கவரில் கட்டி வைத்துள்ளார்.

பின்பு, தன் தோழியிடம் சென்று நடந்தவற்றை கூறி தனக்கு உதவுமாறு தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பதறிப்போன தோழி, பொலிசாருக்கு தகவல் அளிக்க அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்தது.

குழந்தையின் உடல் உடற்கூறு ஆய்வு செய்ததில் குழந்தை பால் குடித்த பிறகுதான் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த பொலிசார், மேற்கொண்டு விசாரனை நடத்தியதில், அந்த மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

Sindinga9 shop