கோவையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி போலி டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி 6 கோடி ரூபாய் சுருட்டிய தம்பதி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் சுரேஷ்குமார், மகேஸ்வரி தம்பதியினிர் தனவர்ஷா டிராவல்ஸ் என்ற பெயரில் போலி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். சீரடி, கோவா, மும்பை, மணாலி, அந்தமான் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும், துபாய், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் சுற்றுலா அழைத்து செல்வதாக விளம்பரம் செய்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் கடந்த மாதம் 21ம் தேதி டிக்கெட் வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் தங்களுக்கு தேவையான பணம் கிடைத்து விடவே கம்பெனியை மூடிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டனர்.

இதுதெரியாமல் பணம் கொடுத்தவர்கள் 21ம் தேதி அந்த போலி டிராவல்ஸ் நிறுவனம் செல்ல, கம்பெனி காலி செய்யப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி முத்துக்குமாரசாமி அளித்த புகாரில் மேற்கண்ட நிறுவனத்தை நம்பி அந்தமான் செல்ல ரூ.3½ லட்சம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ்குமார், மகேஸ்வரி மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் தேட தனிப்படை அமைத்தனர். பின்னர் கோவையில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த சுரேஷ்குமார், மகேஸ்வரியை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் எத்தனை பேரிடம் மோசடி செய்து உள்ளனர் என்பதை கண்டறிய காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Sindinga9 shop