சுர்ஜித் மீட்பு பணிகள் நடைபெறும் இடத்திலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் குறிப்பிட்டது, இவ்வளாவு கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மண் பரிசோதனைக்கு பின்பு மட்டுமே இந்த பணிகள் துவங்கப்பட்டது.

தற்போது இந்த பணிகள் பயனளிக்குமா என்ற கேள்விகுறியாகவே உள்ளது. பாறைகள் உடைக்கும் பணிகள் இயந்திரங்களுக்கே சவாலாக உள்ளது.

தற்போது வரை 40 அடி மட்டமே எட்ட முடிந்துள்ளது. ஆனால் அதற்கு பின் தாண்ட மிகவும் சிரமமாக உள்ளது.

தற்போது மற்ற முறைகள் கையாண்ட குழுவினர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். அவர்கள் மற்றும் மருத்துவர்களிடம் முறையாக ஆலோசனை நடத்தி வேறு திட்டம் உள்ளதா என்பது குறித்து முடிவு செய்யப்படும். மேலும், இது குறித்து குழந்தையின் பெற்றோரிடமும் ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Sindinga9 shop