ஆறு வயது சிறுவன் ஒருவனுடைய பெற்றோர் திடீரென இறந்து போனதால், அவர்களுடைய மரணத்துக்கு அவன்தான் காரணம் என்று கூறி, அவனைக் கொன்று தின்ன முடிவு செய்தது அவன் சார்ந்த ஆதிவாசி கூட்டம்.

ஆனால் வழிகாட்டி ஒருவர் அவனை காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் சென்று தனது மகனாக அவனை வளர்த்தார்.

இப்போது சுமார் 13 ஆண்டுகளுக்குப்பின் அந்த இளைஞர் தன்னை கொன்று தின்ன விரும்பிய அந்த ஆதிவாசிக் கூட்டத்தை மீண்டும் சந்தித்து, இனிமேல் யாரையும் கொன்று தின்ன வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

West Papuaவில் Korowai என்ற ஆதிவாசிக் கூட்டத்தில் பிறந்தவர் Wawa Chombonggai.

Korowai ஆதிவாசிகள், யாராவது ஒருவர் திடீரென இறந்துபோனால், அவர்களது மரணத்துக்கு கெட்ட ஆவிகள்தான் காரணம் என்று நம்புகிறார்கள்.

எனவே ஒருவரின் மரணத்துக்கு இன்னொருவர் காரணம் என்று நம்பினால், அவரைப் பிடித்து கொன்று தின்று விடுவார்கள்.

2006ஆம் ஆண்டு Wawaவின் பெற்றோர் திடீரென இறந்தபோது, அதற்கு காரணம் Wawaதான் என்றும், அவர் ஒரு சூனியக்காரர் என்றும் எண்ணிய அந்த கிராம மக்கள், அதற்கு தண்டனையாக, அவரைக் கொன்று தின்ன முடிவு செய்தார்கள்.

ஆனால் Kornelius Sembiring என்ற முன்னாள் வழிகாட்டி ஒருவர் Wawaவைக் காப்பாற்றி சுமத்ராவிலுள்ள தனது வீட்டிற்கு கொண்டுவந்து, அவரை தனது பிள்ளையாக வளர்த்து வந்தார்.

அதற்காக தான் அவருக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக தெரிவிக்கும் Wawa, தற்போது சுமார் 13 ஆண்டுகளுக்குப்பின், தான் பிறந்த ஆதிவாசி கிராமத்தைக் காணச் சென்றுள்ளார்.

ஒரு காலத்தில் தன்னை கொன்று தின்ன விரும்பிய அதே கூட்டத்தினர், இன்று தன்னை கண்ணீருடன் வரவேற்று உபசரித்ததைக் கண்டு நெகிழ்ந்த Wawa, இனி யாரையும் கொன்று தின்னக்கூடாது என்று அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்படி மாறி மாறி ஒரு கூட்டத்தினர் இன்னொரு கூட்டத்தினரை கொன்று தின்பதால், எல்லா ஆதிவாசிக் கூட்டங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போய்விடும் அபாயம் உள்ளதை, தனது மக்களுக்கு விளக்கினார் அவர்.

அதற்கு பதில், பிரச்னைகள் வந்தால், அதை பேசித் தீர்த்துக் கொள்ளுமாறு ஆலோசனை கூறிவிட்டு தான் வாழும் சுமத்ராவிலுள்ள Sembiring வீட்டுக்கே திரும்பினார் அவர்.

Sindinga9 shop