குயின்ஸ்லேண்ட்: 53 வயதான பெண் ஒருவர் 10 மாதங்களில் 60 கிலோ எடை குறைத்து சாதித்துக் காட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பகுதியில் உள்ள கேனோன் ஹில்லில் வசிப்பவர் ஜாக்குலின் பாரோஸ் (53). 127 கிலோ எடையுடன், அன்றாட வாழ்வை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், தனது உடல் எடையை குறைக்க ஜாக்குலின் தீர்மானித்தார்.

இதன்படி, தினசரி 3 வேளை மட்டும் உணவு, மாலை வேளையில் 5 கோப்பை காஃபி, ஒரு குளிர் பானம், ஒரு ரம் மற்றும் கோக், அவ்வப்போது சிறிதளவு இறைச்சி மட்டுமே உண்டு வந்தார். கடந்த ஜனவரியில் இருந்து இவ்வாறு தீவிர டயட் பின்பற்றி வந்த ஜாக்குலின் ஒருவழியாக, தனது உடல் எடையில், 60 கிலோவை தற்போது குறைத்து, சிக்கென்ற அழகை பெற்றுள்ளார்.
53 வயதிலும் சாதிக்க முடியும் என்பதை அனைவருக்கும் முன்மாதிரியாகச் செய்து காட்டியுள்ளார்.

Sindinga9 shop