Sindinga9 shop

நடிகர் கமல்ஹாசன் கடந்த 7ம் திகதி தனது 65வது பிறந்தநாளை குடும்பத்துடன் சொந்த ஊரான பரமக்குடியில் கொண்டாடினார். அப்போது கமலின் குடும்ப புகைப்படத்தில் நடிகை பூஜா குமார் இடம் பெற்றிருந்தார். இதனைக்கண்ட இணையவாசிகள் பல விமர்சனங்களை அள்ளி வீசினார்கள்.

இந்நிலையில் இதுபற்றி சமீபத்தில் பேட்டியளித்த பூஜா குமார், ”கடந்த 5 வருடமாக நான் கமலுடன் பணியாற்றி வருகிறேன். அவரை போன்ற ஒரு சிறந்த படைப்பாளி யாரும் இருக்க முடியாது. அவர் ஒரு மேஜிக் மேன், அவருக்கு இறைவன் நம்பிக்கை இல்லை என்றாலும் அவரிடம் தொழில் பக்தி நிறைந்திருக்கிறது.

எந்த ஒரு சின்ன விஷயத்தையும் அதிக கவனத்துடன் கையாள்வார். எனக்கு எப்படி பொறுமையாக இருக்கவேண்டும் என்பதை கற்றுக்கொடுத்ததே அவர் தான். எந்த ஒரு விஷயத்திலும் அவரது அணுகுமுறை மிகச் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார்”.