அவுஸ்திரேலியாவில் தெரு நாய் என கருதி நபர் ஒருவர் குடியிருப்பில் ஆசையாக வளர்த்து வந்தது அபூர்வ இன காட்டு ஓநாய் என தெரிய வந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியிலேயே இந்த காட்டு ஓநாயை கண்டெடுத்துள்ளனர்.

தெரு நாய் என கருதியே அந்த நபர் தமது குடியிருப்பில் வளர்த்து வந்துள்ளார். இருப்பினும் அதன் நடவடிக்கைகள் இவருக்கு சந்தேகத்தை தரவே, உடனடியாக அருகாமையில் உள்ள விலங்குகளுக்கான மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

தொடர்ந்து டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. டி.என்.ஏ சோதனையில் அது நாய் அல்ல என்பது உறுதியானது மட்டுமின்றி அவுஸ்திரேலியாவில் அபூர்வ இனமாக கருதப்படும் ஆல்பைன் டிங்கோ எனவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தற்போது அந்த டிங்கோவின் முழு பொறுப்பும் அவுஸ்திரேலியா டிங்கோ அறக்கட்டளையின் சரணாலயம் ஏற்றெடுத்துள்ளது.

ஆல்பைன் டிங்கோ எனப்படும் இந்த அபூர்வ இன காட்டு ஓநாய்கள் ஒரு காலகட்டத்தில் அதிகமாக வேட்டையாடப்பட்டு வந்துள்ளது.

மட்டுமின்றி அரசே முன்னெடுத்த கட்டுப்பாடுகளால் இந்த இனம் அழிவுக்கு உள்ளானது.

ஆகஸ்டு மாதம் இந்த ஆல்பைன் டிங்கோ குட்டியானது கண்டெடுக்கப்பட்ட நிலையில் நவம்பர் முதல் வாரத்திலேயே இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

Sindinga9 shop