திருமணத்தின் போது லட்சக்கணக்கில் கொடுக்கப்பட்ட வரதட்சணையை வேண்டாம் என மாப்பிள்ளை உதறிதள்ளியதோடு வெறும் 11 ரூபாயை மட்டும் பெற்று கொண்டதற்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் ஜிதேந்திரா சிங். இவருக்கும் இளம் பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் என பெரும் கூட்டம் கலந்து கொண்ட நிலையில் மணமேடையில் ஜிதேந்திராவின் மாமனார் அவரிடம் ரூ 11 லட்சத்தை வரதட்சணையாக வழங்கினார்.

ஆனால் எனக்கு இந்த பணம் வேண்டாம் என மாப்பிள்ளை அதை திரும்ப கொடுத்துவிட்டார்.

ஜிதேந்திரா மேலும் வரதட்சணை எதிர்பார்ப்பதாலேயே இதை மறுத்துவிட்டதாக அங்கிருந்த அனைவரும் நினைத்து திகைத்து போனார்கள்.

ஆனால் சில நிமிடங்கள் கழித்து, எனக்கு இவ்வளவு வரதட்சணை வேண்டாம், வெறும் 11 ரூபாய் மற்றும் ஒரு தேங்காய் கொடுங்கள் என கேட்டு வாங்கி கொண்டார்.

இதை பார்த்து மணப்பெண், அவரின் பெற்றோர் ஆனந்த கண்ணீர் விட்டனர்.

இது குறித்து மணப்பெண்ணின் பெற்றோர் கூறுகையில், வரதட்சணை குறைவாக கொடுத்துவிட்டோம் என அவர் வாங்க மறுக்கிறார் என முதலில் நினைத்து அதிர்ச்சியடைந்தோம், ஆனால் ஜிதேந்திராவின் செயல் எங்களை நெகிழ்ச்சியடைய செய்தது என கூறினர்.

ஜிதேந்திரா கூறுகையில், நான எதிர்பார்த்த மாதிரியே எனக்கு மனைவி அமைந்துள்ளார், அவரிடம் வரதட்சணை வாங்கக்கூடாது என நானும், என் பெற்றோரும் முதலிலேயே முடிவு செய்துவிட்டோம்.

திருமண மேடையில் அதை தெரிவிக்கலாம் எனவும் திட்டமிட்டிருந்தோம், அதன்படியே நான் செய்தேன் என கூறியுள்ளார்.

மணமேடையில் மாப்பிள்ளை ஜிதேந்திராவிடம் அவர் மாமனார் லட்சக்கணக்கில் வரதட்சணை கொடுக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

Sindinga9 shop