நம் தினசரி வாழ்க்கையில் செய்தித்தாள்களில் பல குற்றங்களை கடந்துசெல்கிறோம்.குறிப்பாக கொலை கொள்ளை கணவன் மனைவி சண்டை என பல விஷயங்களை நாம் கடந்துசெல்கிறோம்.அந்தவகையில்  கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சில மனக்கசப்புகளால் பல்வேறு விதமான குற்றங்கள் நடைபெறுகின்றன.

அவ்வாறு சென்னையில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவன் சிகரெட் நெருப்பால் மனைவியைக் கொலை செய்ய முயன்ற கொடூரம் நடந்துள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தில் கக்கன் நகரில் வசித்து வருபவர்கள் ராஜன். இவருக்கும் பஞ்சவர்ணம் என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இருவருக்கும் குடும்ப வாழ்க்கை சுமீகமாக இல்லை எனத் தெரிகிறது. இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.

இதையடுத்து வழக்கம்போல இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருக்க கோபமான ராஜன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை பஞ்சவர்ணத்தின் மேல் ஊற்றி சிகரெட் நெருப்பால் அவரைப் கொளுத்தியுள்ளார்.

இதனால் அவர் உடல் முழுவதும் தீப்பரவ வலியால் துடித்துள்ளார். அவரின் அலறல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். இது சம்மந்தமாக அவரிடம் வாக்குமூலம் பெற்ற அதிகாரிகள் உடனடியாக ராஜனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Sindinga9 shop