முந்தைய காலகட்டத்தில் சமைப்பதற்கு விறகு அடுப்புகளே பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும் அதனால் பாதிப்புகள் அதிகளவு ஏற்படவில்லை. ஆனால் தற்போது நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு கேஸ் சிலிண்டர்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு கேஸ்சிலிண்டரை பயன்படுத்தி சமைக்கும் பொழுது அனைவரும் மிக கவனமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் சிறு தீப்பொறி கூட பெரும் விபத்தை ஏற்படுத்தலாம். அதனால் வெளியில் செல்லும்போதோ அல்லது வீட்டில் இருக்கும் போது கேஸ் சிலிண்டர்களை கவனமாக கையாள வேண்டும். மேலும் பயன்படுத்தி முடித்த பிறகு அதனை உடனே நிறுத்தி வைத்து விட வேண்டும்.

இருப்பினும் பல இடங்களில் கவனக்குறைவுகளால் ககேஸ் சிலிண்டர்கள் வெடித்து பல ஏராளமான. உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் அவ்வாறு ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும், அவற்றால் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில் சிலிண்டரில் தீ பற்றும் போது நொடிப்பொழுதில் எளிமையாக எவ்வாறு அவற்றில் இருந்து தப்பிக்கலாம் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது.

Sindinga9 shop