இந்திய மாநிலமான ஒடிசாவில் இளைஞர் ஒருவர் மொபைல் போனை தலையணைக்கு அடியில் வைத்து சார்ஜ் போட்டுவிட்டு உறங்கியதால் போன் வெடித்து பரிதாப உயிரிழந்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் நாயகர் மாவட்டத்தில் உள்ள ரான்பூர் கிராமத்தைச் சேர்ந்த குனா பிரதான்(22). ஜகந்நாத் கோவில் கட்டுமானத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்த இவர், வேலை முடிந்து சக தொழிலாளர்களுடன் அறையில் தங்கியுள்ளார்.

அப்பொழுது தனது மொபைல் போனை சார்ஜ் போட்டுவிட்டு அதனை தனது தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு தூங்கியுள்ளார். அதிகாலை 5 மணியளவில் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே குனா பிரதான் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குனா பிரதானின் உடலை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தலையணைக்கு அடியில் சார்ஜ் போட்டு வைத்திருந்ததால் அளவுக்கு அதிகமான வெப்பத்தினால் போன் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

மக்கள் இனி தூங்கும் போது தலைக்கு அருகே போனை சார்ஜ் போட்டு வைத்துவிட்டு தூங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது.

Sindinga9 shop