அமெரிக்காவில் வீகன் டயட் உணவுப் பழக்கத்தினை 18 மாதக்குழந்தைக்கு பயன்படுத்தியதால் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பால் மற்றும் பால் பொருட்கள், அசைவ உணவுகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகள் போன்றவற்றை முழுமையாக தவிர்த்து முழுக்க முழுக்க தாவரங்களை மட்டுமே உணவாக எடுத்து கொள்வதே வீகன் டயட். வீகன் டயட்டை பின்பற்றும்போது புரத இழப்பு ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வந்தது தற்போது உண்மையாகியுள்ளது.

அமெரிக்கா ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஷீலா, ரயான் தம்பதிகளுக்கு 5, 3 மற்றும் 18 மாதம் என மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். குறித்த தம்பதிகள் தீவிர சைவ உணவு பழக்கமான வீகன் உணவுமுறையினைப் பின்பற்றி வந்துள்ளனர்.

இம்மாதிரியான முறையிலேயே தனது மூன்று குழந்தைகளுக்கு உணவுகளைக் கொடுத்து வந்துள்ளனர். பால், முட்டை போன்ற புரத உணவு அளிக்காததால் சத்துக்குறைபாடுடன் 18 மாத குழந்தை காணப்பட்டுள்ளது.

ஆனால் இதனைக் கண்டுகொள்ளாத பெற்றோர் மீண்டும் குறித்த வீகன் டயட்டினை பின்பற்றியுள்ளதால் பரிதாபமாக இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமன்றி மேலும் இரண்டு குழந்தைகளுக்கும் பல் சொத்தை, உடல் சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்தான உணவை அளிக்காமல் குழந்தையை கொன்ற குற்றத்திற்காக குறித்த தம்பதிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Sindinga9 shop