சீனாவில் நாய் கடித்ததால் நபர் ஒருவரின் கண்ணில் புழு வளர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்தவர் யான்(54). இவர் கடந்த சில தினங்களாக இடது கண்ணில் ஊசி குத்துவது போன்ற வலியை உணர்ந்துள்ளார்.

மேலும், இடது கண்ணில் இருந்து தொடர்ந்து நீர் வடிந்த வண்ணம் இருந்துள்ளது.

இதனால், கண்ணை பரிசோதித்து பார்ப்பதற்காக யான் மருத்துவமனை சென்றுள்ளார். அவரது கண்ணை சோதித்து பார்த்த மருத்துவர்கள் கண்ணில் புழு நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர்.

குறித்த புழு 2 செ.மீ நீளம் வரை வளர்ந்திருந்தையும், அதன் முட்டைகள் கண்ணில் இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து, இதையடுத்து, யான் கண்ணில் வளர்ந்திருந்த புழு, அதன் முட்டைகளை டாக்டர்கள் அகற்றினர்.

பின்னர், இதுகுறித்து மருத்துவர்கள் விசாரணை செய்து பார்த்ததில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வளர்த்து வந்த நாய் தன்னை கடித்ததாகவும், அதன் பின்னரே இது போன்ற பிரச்சனை கண்ணில் ஏற்பட்டதாகவும் யான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், யான் கூறியதை வைத்து, மருத்துவர்கள் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வகை புழுக்கள் பூனைகள் மற்றும் நாய்களின் கண்களில் காணப்படும். அவை மனிதர்களை கடித்தால் படிப்படியாக, ரத்தத்தில் இருந்து வளர்ந்து, கண்களின் அடியில் சென்று தேங்கிவிடும்.

எனவே, வளர்ப்புப் பிராணிகளிடம் மனிதர்கள் கவனமாக இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Sindinga9 shop