பானி பூரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு நொறுக்கு தீண்பண்டமாக இது உள்ளது.

இதனை தினமும் சாப்பிட்டால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். இனி என்ன என்ன பக்கவிளைவுகள் இருக்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள்.

  • மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணெயில் பொரிக்கப்பட்ட பூரியை எடுத்துக்கொண்டால், உடலில் கெட்ட கொழுப்பு சேரும்.
  • இது புற்றுநோயை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது.
  • பானி பூரியில் பான் மசாலா கலப்பதாக கூறப்படுகிறது. பான் மசாலாவும் ஒருவகைப் புகையிலைப் பொருள்தான். இதனால் புகையிலை யால் ஏற்படக்கூடிய புற்றுநோய் போன்ற பல பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடும்.
  • பானி பூரியில் அதிகளவு சோடியம் உள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
  • பானி பூரி விற்பவரின் கைகளில் பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால், அவரிடம் இருந்து நாம் வாங்கி சாப்பிடும் பானி பூரியால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை பிரச்சனைகள் ஏற்படலாம்.
  • மேலும் பானி பூரி அதிகம் சாப்பிடுவதால் டைபாய்டு ஏற்படுவதற்கான அபாயமும் அதிகம் உள்ளது.
முக்கிய குறிப்பு

காரம், புளிப்பு என சுவை மிகுந்து காணப்படும் பானி பூரியில் சத்துகள் பெரிதாக ஒன்றும் இல்லை.

சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பானி பூரிகளை சாப்பிடாமல், சுகாதாரமான முறையில் தயாரிப்பதைச் சாப்பிடலாம்.

வீட்டிலேயே நாம் சுகாதாரமான முறையில் பானி பூரி தயாரித்துச் சாப்பிடலாம்.

Sindinga9 shop