உடல் எடையை குறைக்க பல எளிமையான வழிகள் உள்ளன. அந்த வகையில் வெங்காயம் உங்களது குண்டான உடலை சட்டென குறைக்க உதவும்.

வெங்காயத்தை நீங்கள் கீழ் குறிப்பிட்டவாறு பயன்படுத்தினால் விரைவில் உடல் பருமனை குறைத்து விடலாம்.

வெங்காய சாறு…

உடல் எடையை குறைக்க இந்த வெங்காய சாறு நன்கு உதவும். இதனை தொடர்ந்து குடித்து வந்தாலே உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து நீங்கள் கச்சிதமான உடல் எடையை பெற்று விடுவீர்கள்.

தேவையானவை
  • வெங்காயம் 1
  • நீர் 3 கப்
செய்முறை

முதலில் வெங்காயத்தை நன்றாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நீர் சேர்த்து கொண்டு, நறுக்கிய வெங்காயத்தை அதனுள் போட வேண்டும். இதனை இப்படியே 5 நிமிடம் கொதிக்க விட்டு இந்த நீரை வடிகட்டி கொள்ளவும்.

இந்த நீரை தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும். ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தினை உங்களினால் உணர முடியும்

Sindinga9 shop