நடிகை அஞ்சலி 2007-ல் ‘கற்றது தமிழ்’ படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். ‘அங்காடி தெரு’ திருப்புமுனை படமாக அமைந்தது.
எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். தொடர்ந்து படங்களில் தீவிரமாக நடித்து கொண்டு இருந்த அவர் தனது வளர்ப்பு தாய் மீது பணத்தை அபகரித்து விட்டதாக குற்றம் சாட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.
தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை. சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.அதன் பிறகு, பிரபல நடிகருடன் காதல் விவகாரத்தில் சிக்கினார்.
தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில், தன்னுடைய உடல் மீது அதித அக்கறை கொண்ட அஞ்சலி தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.
அப்படி தற்போது யோகோ செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “என்னுடைய சண்டே இப்படி தான் இருக்கும் ” என்று கூறியுள்ளார். அந்த புகைப்படங்களைதழைகீழாக திருப்பி பார்த்தால் தான் அது அஞ்சலி என்றே தெரிகின்றது. என தலைகீழாக பார்த்துக்கொண்டிருகிறார்கள் ரசிகர்கள்.
Sindinga9 shop