தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஈஸ்வர் ரகுநாத் மற்றும் நடிகை ஜெயஸ்ரீ. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சென்னை திருவான்மியூர் எல்.பி.ரோட்டில்உள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் இவர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
ஈஸ்வர் ரகுநாத் தனது மனைவி ஜெயஸ்ரீ-யின் சொத்து ஆவணங்களை வைத்து 30 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். ஆனால், அதனை முறையாக திருப்பி செலுத்தாமல் போன காரணத்தினால் அந்த சொத்தை மீட்க முடியாமல் மூழ்கும் நிலைக்கு வந்துள்ளது.
இதனால் அவர்கள் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மனைவி ஜெயஸ்ரீயை ஈஸ்வர் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அதில் பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விசாரித்த போலீசார், ஈஸ்வர் மற்றும் அவரது தாய் சந்திரா ஆகியோரை கைது செய்தனர்.
தாய் சந்திராவிற்க்கு 54 வயது ஆவதால் அவருக்கு மட்டும் ஜாமீன் கொடுத்து அனுப்பி விட்டனர். நடிகர் ஈஸ்வர் ரகுநாத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு சிறையில் அடைத்துள்ளனர் போலீசார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sindinga9 shop