நடிகர் R.J.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் மூக்குத்தி அம்மன். வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேசன் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் பூஜை நேற்று முன்தினம் தான் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் நடந்தது. ஆனால் வழக்கம்போல் இந்த பூஜையில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை.
அதே வேளையில், நேற்று நயன்தாரா தனது நண்பர்களுடன் தேங்க்ஸ் கிவ்விங் டே-வை அமெரிக்காவில் கொண்டாடிக்கொண்டிருந்தார். அப்போது வான்கோழி வறுவலை கையில் வைத்து மேஜிக் செய்வது போன்று அவர் விளையாடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
மேலும், சில வீடியோ காட்சிகளும் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து அந்த வீடியோவைப்பார்த்த நெட்டிசன்கள், மூக்குத்தி அம்மன் படத்திற்காக நயன்தாரா விரதமிருந்து வருவதாகவும், அதற்காக சுத்தமான சைவத்திற்கு மாறி விட்டதாகவும் ஆர்.ஜே.பாலாஜி சொன்னாரே,..? படம் பூஜை போடுற நாளில் வேண்டுமென்றே கையில் வான்கோழி வறுவலை வைத்துகொண்டு ஷோ கட்டிக்கிட்டு இருக்கீங்க..? இதுதான் உங்க விரதமா..? என்று விளாசி வருகிறார்கள்.

Sindinga9 shop