விபூதி என்றால் ஐசுவரியம், செல்வம், லட்சுமி கடாட்சம் ,மகிமை என்பது பொருள். விபூதி, திருநீறு என்று அழைக்கப்படும். அத்தகைய விபூதியை உடலில் எங்கெல்லாம் அணியலாம். எப்படி எல்லாம் அணியலாம் என்று பார்ப்போம்.

 திருநீரை எங்கெல்லாம் அணியலாம்: உச்சந் தலை, நெற்றி, மார்பு பகுதியில், தொப்புளுக்கு சற்று மேலே, இடது தோள்பட்டையில், வலது தோள்பட்டை, இடது மற்றும் வலது கை, வலது கையின் நடுவிரல், இடது மற்றும் வலது மணிக்கட்டில், இடது மற்றும் வலது இடுப்பு பகுதியில், இடது மற்றும் வலது கால் நடுவில், முதுகுக்கு கீழ் பகுதி, கழுத்து முழுவதும், இரண்டு காதுகளின் பின்புறம் உள்ள குழியில் என உடலின் மேற்கண்ட இடங்களில் திருநீறு அணிந்து கொள்வது சிறப்பு.

பலன்கள்: மனதில் இறை பக்தி மேலோங்கும். நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்கள் விலகும். நல்ல எண்ணங்கள் தோன்றும்.

 நிலையான செல்வமும் நல்ல குடும்பம் நல்ல நண்பர்கள், உடல் ஆரோக்கியம் சீராகும். தகாத செயல்களைச் செய்வதிலிருந்து மனம் விலகி செல்லும்.

 எந்தவிதத்திலும் தொல்லைகள் நம்மை அணுகாமல் பாதுகாக்கும் கவசமாக திகழும். திருநீறு பிறவா பேரின்ப நிலையை இறுதியில் அருளும்.

 குறிப்பு: விபூதியை நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வரிக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை தண்ணீரில் குழைத்து அணியலாம்.

Sindinga9 shop