ஒருமுறை விநாயகப்பெருமான் சந்திர லோகத்துக்கு விஜயம் செய்தார். கையில் கொழுக்கட்டை உடன் வந்திருந்த விநாயகரை கண்டு ஏளனம் செய்தார் சந்திரன். சந்திரன் மீது விநாயகர் மிகுந்த கோபமடைந்தார். அன்று பிள்ளையார் சதுர்த்தி. கணபதி சதுர்த்தியில் உன்னை பார்ப்பவர்கள் வீண்பழிக்கு ஆளாவார்கள் என்று சபித்தார்.
மனம் வருந்திய சந்திரன் அறியாது செய்த தவறை மன்னித்து சாப விமோசனம் தரும்படி கேட்டான்.
நான்காம் பிறையை பார்த்தால் வரும் கெடுபலனை எப்படித் தவிர்க்கலாம்? புராண காலத்தில் கிடைத்த ஒரு தீர்வை பார்ப்போம். ஒருமுறை சதுர்த்தியில் வரும் நான்காம் பிறையைப் பார்த்ததால் வீண் பழிக்கு ஆளானார் கண்ணன். இதற்குப் பரிகாரமாக அடுத்த மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில்
சந்திரதரிசனம் செய்வதோடு கணபதியையும் வேண்டி அருள் பெறலாம்.
காலை வேளை பிரம்ம முகூர்த்தம் ஆகும். மாலை வேளை விஷ்னு முகூர்த்தம் ஆகும். எனவே அந்த வேளையில் சந்திர தரிசனம் செய்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும்.