♦️ மண் அகலில் தாமரை திரி போட்டு நெய் விளக்கு ஏற்றி ஞாயிற்றுக் கிழமை ராகுகால நேரம் அல்லது தேய்பிறை அஷ்டமி அல்லது பவுர்ணமி அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ பூஜையைத் துவக்கி 108 நாட்கள் செய்யவேண்டும்.

♦️ கோவிலில் இருக்கும் பைரவருக்கு வீட்டில் பூஜையை துவக்குவதற்கு முன்பு சந்தனக்காப்பு செய்து, சம்பங்கி மாலை அணிவித்து, புனுகு பூசி, பால்பாயசம், நெல்லிக்கனி, ஆரஞ்சு, வறுத்த கடலை, பருப்பு பொடி கலந்த அன்னம் இவைகளை நிவேதனம் செய்து மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு, அதன் பிறகு வீட்டில் ஏற்றிவைத்த தீபத்தின் முன் அமர்ந்து ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் காயத்ரியையும் 330 முறை படித்துவிட்டு, பைரவர் 108 போற்றி சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

♦️ மாங்கல்ய தோஷம் நீங்க: தனது கணவரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ, அதனால் மாங்கல்யத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயப்படும் பெண்கள் செவ்வாய்க்கிழமை எமகண்டத்தில் பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து விரலி மஞ்சள் மாலை சூட்டி மஞ்சள் கயிறு சமர்ப்பித்து சர்க்கரை பொங்கல், பால் பாயசம், பானகம் நிவேதனம் செய்து சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் ஜாக்கெட் துணையுடன் வசதியிருந்தால் புடவையும் கொடுத்து பைரவரை வழிபட வேண்டும்.

♦️ இழந்த பொருள் கிடைக்க: மானம், மரியாதை, கௌரவம், இடம் சொத்து போன்ற நீங்கள் இழந்த பொருள் மீண்டும் உங்களுக்கு கிடைத்திட பைரவர் முன் 27 மிளகை மூட்டையாகக் கட்டி தீபம் ஏற்றி வைத்தும், வராகிக்கு முன் சிறிது வெண்கடுகை மூட்டையாகக் கட்டி நெய் தீபம் போட்டு வழிபட வேண்டும்.

Sindinga9 shop