* வளர்பிறை பிரதமை- கண் திருஷ்டி, செய்வினை தோஷங்கள் அகலும்.

* தேய்பிறை பிரதமை – வறுமை நீங்கி குபேர சம்பத்து ஏற்படும்.

* வளர்பிறை திருதியை – சந்திரனால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.

* வளர்பிறை சஷ்டி – செவ்வாய் தோஷம் அகலும்.

* வளர்பிறை சப்தமி – சூரிய பகவானால் உண்டான தோஷங்கள் நீங்கும்.

* வளர்பிறை சதுர்த்தி – விநாயகப் பெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும். தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

* தேய்பிறை நவமி – மரண பயம் நீங்கும்.

* தேய்பிறை தசமி – குரு தோஷம் விலகும். புத்திரபாக்கியம் கிடைக்கும்.

* வளர்பிறை துவாதசி – புதன் தோஷம் விலகும், அறிவாற்றல் பெருகும்.

* தேய்பிறை துவாதசி – மஹாவிஷ்ணுவின் நெஞ்சில் குடியிருக்கும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

* அம்மாவாசை – ஆண்குழந்தை பிறக்கும் வரம் கிடைக்கும்.

* பௌர்ணமி – மகாலட்சுமியின் அம்சமான பெண் வாரிசு பிறக்கும் யோகம் வாய்க்கும்.

* வானத்தில் வட்டமிடும் கருடனை அனைத்து நேரங்களிலும் காண இயலாது. எனவே பெருமாள் தளங்களில் கருடாழ்வாரை வணங்கி அவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்யலாம்.

Sindinga9 shop