உடலிலிருந்து உயிர் பிரிந்தவுடன் ரத்தம் உறைகிறது. மூக்கில் உள்ள சளி போன்ற தேவையில்லாத திரவங்கள் வெளியே வராமல் இருக்கவே மூக்கில்
பஞ்சை வைத்து அடைக்கின்றனர்.

綠‍♂️ அடக்கி வைத்திருக்கும் வாயுக்கள் அனைத்தும் அந்த உடலிலிருந்து மெல்லமெல்ல வெளியேறுகிறது. என்னதான் பன்னீர் தெளித்தும், மலர் மாலைகளை அணிவித்து அந்த உடல் துர்நாற்றத்தை மறைக்க நினைத்த போதிலும் நுண்கிருமிகள் அதன் வாசனையை பிடித்துக் கொண்டு வந்து அங்கு குடி புகுந்து விடுகிறது.

綠‍♂️ இந்த நுண்ணுயிர்களின் தாக்கத்தால் திசுக்கள் வெடிக்கும். இதனால் உடலானது வெளிர் மற்றும் ஊதா நிறத்தில் மாறும்.

綠‍♂️ நுண்ணுயிரிகள் ஒரே நாளில் பல மடங்கு பெருகி பரவும் இயல்புடையது. ஆகவே அந்த நுண்ணுயிரிகள் இறந்தவர் உடலின் அருகில் இருக்கும் நம்மை விட்டு வைப்பதில்லை. நமது உடலிலும் வந்து தொற்றிக் கொள்ளும் இயல்பு கொண்டது. இதையே நமது முன்னோர்கள் தீட்டு என்றனர்.

綠‍♂️ இதனால் நமது வீட்டு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயோதிகர்கள் ஆகியவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே இறந்தவர் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்ற சம்பிரதாயத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்தினர்.

綠‍♂️ அந்தக் காலத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது. ஆகவே நம்முடைய தீட்டு அனைத்தும் அந்த ஓடுகின்ற நீரில் நீங்கி விடும். ஆனால் இன்று ஆறுகளும் இல்லை, குளங்களும் இல்லை. ஆகவே வீட்டு குளியலறையில் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

Sindinga9 shop