முடி உதிர்தல் பிரச்சினை பொதுவாக எல்லாருக்கும் இருக்கும் ஒரு தலையாய பிரச்சினை. இதனுடன் பொடுகு, தலை அரிப்பு போன்றவையும் தொற்றிக் கொள்ளும். சில பேருக்கு முடி உதிர்தல் ஏற்பட்டு வழுக்கை கூட அந்த இடத்தில் ஏற்பட்டு விடும்.

என்னன்னமோ ஆயில் தேய்த்தாலும் தலை முடி மறுபடியும் வளராத சோகத்தில் தான் நாம் இருப்போம். இந்த பிரச்சினைக்கு பெரிதான தீர்வை தேடி போக வேண்டும் என்றே அவசியமே இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை நீங்கள் பயன்படுத்தினாலே போதும் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும்.

ஒவ்வொரு வீட்டின் சமயலறையில் காணப்படும் பொதுவான பொருள் இஞ்சி. இஞ்சியுடன் பூண்டை சேர்த்து, முடி உதிர்வதைக் குறைக்கலாம்.

2மிதமான அளவு இஞ்சித் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்.

8 பூண்டு பற்களை எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் நன்றாக மசித்துக் கொள்ளவும்.

இஞ்சி பூண்டு விழுது தயாரித்து ஒரு புறம் வைத்துக் கொள்ளவும்.

தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுள் ஏதாவது ஒரு எண்ணெய்யை எடுத்து ஒரு பேனில் ஊற்றி சூடாக்கவும்.

இந்த எண்ணெயில் அரைத்து வைத்த விழுதைச் சேர்க்கவும். இந்த விழுது பழுப்பு நிறமாக மாறும் வரை சூடாக்கவும். பிறகு இந்த கலவையை ஆற விடவும். இந்த கலவை முற்றிலும் ஆறியவுடன், இஞ்சி பூண்டு விழுதை எண்ணெயில் இருந்து பிரித்து எடுக்கவும்.

எப்படி பயன்படுத்துவது?

பிறகு இந்த எண்ணெய்யை தலைமுடியில் தடவி, மென்மையாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

வழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த செய்முறையைப் பின்பற்றவும்.

தொடக்கத்தில் பூண்டை தலைமுடிக்கு பயன்படுத்தும்போது லேசான எரிச்சல் ஏற்படலாம். ஒருவேளை அதிக எரிச்சல் ஏற்பட்டால், அதனைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளவும். பூண்டு எண்ணெய்யை நேரடியாக தலையில் தடவுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Sindinga9 shop