பாகிஸ்தானில் திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமகன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பேஷாவரை சேர்ந்த இளைஞருக்கும், இளம்பெண்ணுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது அங்கிருந்த அபித் என்ற நபர் மணமகனை துப்பாக்கியால் சுட்டு விட்டு கொன்றுவிட்டு தப்பியோடினார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்த மணமகன் சடலத்தை கைப்பற்றி விட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் கூறுகையில், வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமகன் இளம்பெண் நடனம் ஆடுவதை வீடியோ எடுத்துள்ளார்.

இது தொடர்பாக அபித் உள்ளிட்ட சிலருடன் மணமகனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது, பின்னர் தான் அபித் மணமகனை சுட்டு கொன்றுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அபித்தை தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்.

இதனிடையில் திருமணம் முடிந்த உடனேயே மணமகன் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sindinga9 shop