கமல்ஹாசனுக்கு எதிராக அரசியலில் நடிகை கவுதமியை பா.ஜ.க களமிறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசனுடன் நம்மவர், அபூர்வ சகோதரர்கள், பாபநாசம் உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை கவுதமி.

இவர் கமல்ஹாசனுடன் 13 வருடங்கள் துணைவியாகவும் இருந்தார். பின்னர் கடந்தாண்டு கருத்து வேறுபாடு காரணமாக கமலிடம் இருந்து கவுதமி பிரிந்தார்.

பிறகு சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்கினார்.இதனிடையில் கவுதமி அரசியல் பக்கம் கவனத்தை திருப்பினார்.

இதையடுத்து பிரதமர் மோடியை சந்தித்து பேசிய கவுதமி டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய கையோடு ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பேட்டியளித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

கடந்த மாதம் சென்னையில் பா.ஜனதா சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கவுதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பா.ஜனதா வேட்பாளர் தேர்விலும் கவுதமிக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக கவுதமி களம் இறங்கி உள்ளார். இது குறித்து பேசிய அவர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த புரிதல் இல்லாமல் சிலர் எதிர்ப்பதாக கூறியுள்ளார்.

கவுதமி கூறிய அந்த சிலரில் கமல்ஹாசனும் அடங்குவார். அந்த சட்டத்திற்கு எதிராக கமலின் மக்கள் நீதி மய்யம் உச்சநீதிமன்றம் வரை சென்றது.

இந்த நிலையில் தான் கமலுக்கு எதிராகவே கவுதமி பேசியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சிக்கும் கமலை விமர்சிக்க கவுதமியை அந்த கட்சி களம் இறக்கியுள்ளதாகவும் அவருக்கு விரைவில் செய்தித்தொடர்பாளர் பதவி கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

Sindinga9 shop