தைவான் நாட்டின் பொது ஊழியர்களின் தலைவரும், மூத்த இராணுவ அதிகாரியுமான ஷென் யி-மிங் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு தைவானில் ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறங்கிய பின்னர் தைவானின் மூத்த இராணுவ அதிகாரியை காணவில்லை என்று நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டரில் பயணம் செய்த நாட்டின் பொது ஊழியர்களின் தலைவரான விமானப்படை ஜெனரல் ஷென் யி-மிங் உட்பட 13 பேரை மீட்க்கும் பணி நடந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது,

யுஹெச் -60எம் ஹெலிகாப்டர், புத்தாண்டுக்கு முன்னதாக வடகிழக்கு யிலான் மாவட்டத்திலுள்ள படையினரைப் பார்வையிடுவதற்கான வழக்கமான பணிக்கு புறப்பட்ட பின்னர், அறியப்படாத காரணங்களுக்காக தைபே அருகே உள்ள மலைகளில் விபத்துக்குள்ளானது என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷென் உட்பட பலர் இன்னும் காணவில்லை, பலர் உயிருடன் காணப்பட்டனர் என அமைச்சகம் மேலும் கூறியது, மீட்பு பணிக்காக ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 11ம் திகதி தைவானில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது சந்தேகங்களை கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Sindinga9 shop