தை மாத தொடக்கத்தில் கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால், சூரியன்,புதன் மகரம் ராசியில் சஞ்சரிக்கின்றனர்.

மிதுன ராசியில் ராகு, தனுசு ராசியில் சனி, கேது, குரு, விருச்சிகத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய், கும்பத்தில் சுக்கிரன்,என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

தை மாதம் கிரகங்களின் பெயர்ச்சியை பார்த்தால், தை பத்தாம் தேதி சனிபகவான் மகரம் ராசிக்கு இடம் மாறுகிறார், 16ஆம் தேதி கும்பத்திற்கு இடம்மாறுகிறார்.

தை 19ஆம் தேதி மீனம் ராசிக்கு சுக்கிரன் இடம் மாறுகிறார். தை 24ஆம் தேதி செவ்வாய் தனுசு ராசிக்கு இடம் மாறி அங்கு சஞ்சரிக்கும் குரு, கேது உடன் கூட்டணி சேருகிறார்.

கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து சிம்மராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சிம்மம்

தை மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் தை மாதத்தில் சூரியன் புதன் ஆறாம் வீட்டிலும் ஐந்தாம் வீட்டில் கேது, குரு, சனி இணைந்திருக்கிறார்கள்.

ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. பத்தாம் தேதிக்கு மேல் சனி ஆறாம் வீட்டிற்கு சென்று சூரியனோடு இணைகிறார். புதன் 16ஆம் தேதி ஏழாம் வீட்டிற்கு நகர்கிறார், 19ஆம் தேதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

நல்ல நேரம் உங்களுக்கு ஆரம்பமாகிவிட்டது. படிப்பில் உயர்கல்வி யோகம், வெளிநாடு கல்வியோகம் வந்து விட்டது.

மாணவர்களுக்கு புத்திசாலித்தனம் மேலோங்கும் தேர்வுகளை உற்சாகமாக எதிர்கொள்வீர்கள். களத்திர சுக்கிரன் உற்சாகத்தை கொடுப்பார். திருமணம் ஆகாத சிம்மராசிக்காரர்களுக்கு உற்சாகம் மேம்படும் கல்யாணம் யோகம் கைகூடி வரப்போகிறது.

தட்டிப்போன வரன்கள் கூட உங்களை தேடி வரும். புத்திரயோகம் வந்து விட்டது. வீட்டில் குவா குவா சத்தம் கேட்கப்போகிறது. கணவன் மனைவி உறவில் உற்சாகம் ஏற்படும்.

புதிய வேலைகள் கிடைக்கும். அரசு வேலை உங்களை தேடி வரப்போகிறது. வெளிநாடு வேலையை எதிர்பார்ப்பவர்களுக்கு நன்மைகள் நாடி வரப்போகிறது விமானத்தில் பறக்கப்போகிறீர்கள்.

இதுநாள் வரை பணியில் இருந்த பளு நீங்கப்போகிறது. அலுவலகத்தில் உங்களை கொண்டாடப்போகிறார்கள்.

கடன் வாங்க நிங்க இந்த மாதத்தில் முயற்சி செய்யாதீங்க இருந்த கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள். அந்த அளவிற்கு வருமானம் அதிகமாகும். வம்பு வழக்குகள் தீரும் உங்களுக்கு சாதகமானதாகவே முடியும்.

நோய்கள் தீரும் காலம் வந்து விட்டது. மொத்தத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு தை பிறந்து வழி பிறந்து விட்டது.

இருக்கிறதை விட்டு விட்டு பறக்க ஆசைப்படாதீங்க, புதிய தொழில் ஆரம்பிக்காதீங்க நல்லதில்லை.

Sindinga9 shop